ஊட்டி, ஜன. 6: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் லல்லியம் மலர் செடிகள் உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசனின் போது பல ஆயிரம் மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் காணப்படும்.
மற்ற சமயங்களில் மலர்கள் இல்லாத போதிலும், லில்லியம் போன்ற ஒரு சில மலர்கள் உற்பத்தி செய்து சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மாடங்களில் அடுக்கி வைப்பது வழக்கம்.இந்நிலையில், மார்ச் மாதம் சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காகவும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மாடங்களில் காட்சிப்டுத்துவதற்காகவும் 7 ஆயிரம் லில்லியம் மலர் செடிகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மலர் செடிகளில் 3 ஆயிரம் மலர் செடிகள் மட்டுமே சென்னை மலர் கண்காட்சிக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. மீதமுள்ள 4 ஆயிரம் மலர் செடிகளில் மலர்கள் பூத்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் பூங்கா மாடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூங்காவில் மலர்கள் இருக்காது. இதனால், இச்சமயங்களில் இந்த லில்லியம் மலர் அலங்காரங்களை மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது பூங்கா நர்சரியில் 7 ஆயிரம் லில்லியம் மலர் செடிகள் உற்பத்தியில் ஊிழயர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் லல்லியம் மலர் appeared first on Dinakaran.